தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பிரித்தானியா பிரதமரின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை!
மார்ச் 27 அன்று கொரோனா உறுதியான நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் அறிகுறிகளை தொடர்ந்து அனுபவித்து வந்த போரிஸ் ஜான்சன் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திங்களன்று ஜான்சனுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது மற்றும் மத்திய லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்த பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக டவுனிங் ஸ்ட்ரீட் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அவருக்கு நெருக்கமான இரண்டு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் உடல்நலமடைந்து டவுனிங் ஸ்ட்ரீட் திரும்ப வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, இந்திய பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பிரித்தானியா பிரதமரின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை!
Reviewed by Author
on
April 07, 2020
Rating:

No comments:
Post a Comment