மாணவர்களுக்காக இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்! -
இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியின் இரண்டு அலைவரிசைகள் கல்விக்கான அலைவரிசைகளாக மாற்றப்படுகின்றன.
இது தொடர்பில் இன்று கல்வி அமைச்சுக்கும், உயர்கல்வி அமைச்சுக்கும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் நாளை முதல் செனல் ஐ சிங்கள மொழியில் கல்வி நிகழ்ச்சிகளையும், நேத்ரா டிவி தமிழ் மொழியில் கல்வி நிகழ்ச்சிகளையும் தரவுள்ளன.
கொரோனா வைரஸால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இது மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமையவே நாளை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.
கல்விப்பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்த அலைவரிசைகளின் மூலம் கல்வி நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கப்படவுள்ளன.
மாணவர்களுக்காக இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்! -
Reviewed by Author
on
April 08, 2020
Rating:

No comments:
Post a Comment