இலங்கையில் 2ம் கட்டத்தில் விரிவடையும் கொரோனா! இரண்டு வாரங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை -
"இலங்கையில் கொரோனா ரைவஸின் பரவல் அடுத்த கட்டத்திற்கு விரிவடையும் காலப்பகுதி ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக முன்னரை விடவும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இலங்கை சிறப்பு மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்களினால் சுகாதார அமைச்சிடம் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டாம்கட்ட விரிவாக்க காலப்பகுதியில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஏப்ரல் மாதம் இறுதி வரை சிக்கலுக்குரிய நிலைமை ஏற்பட கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் நவின் டி சில்வா இதனை தெரிவித்திருந்தார்.
எனினும் முழுமையான முடக்கம் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அனைவரும் சுகாதார அதிகாரிகள் ஆலோசனைகளை பின்பற்றி வீடுகளில் இருந்தால் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 2ம் கட்டத்தில் விரிவடையும் கொரோனா! இரண்டு வாரங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை -
Reviewed by Author
on
April 08, 2020
Rating:

No comments:
Post a Comment