இலங்கை செய்தித்தாள் ஒன்றின் மீது சீனத் தூதரகம் அதிருப்தி -
இலங்கையில் வெளியாகும் செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தி குறித்து சீன தூதரகம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியில் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீன அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்ற வகையில் கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்ததாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சீன தூதரகம் பகிரங்க கடிதத்தை அனுப்பியுள்ளது. அந்த கடிதம் சீன தூதரக இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இந்த கடிதத்தில் குறித்த செய்திக்காக சீன அரசாங்கம் கடும் ஆட்சேபனையை வெளியிடுவதாகவும் இது முழுமையாக வெறுப்பை தூண்டுவதாகவும் சீன தூதரகத்தின் பேச்சாளர் லூ சொங் தெரிவித்துள்ளார்.
சீனாவிலேயே இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் இல்லை. உலக சுகாதார மையமும் இன்னும் அது தொடர்பில அறிவிக்கவில்லை.
ஏற்கனவே 2019ஆம் ஆண்டில் பரவும் வைரஸ் ஒன்று காரணமாக சுமார் 20ஆயிரம் பேர் வரை மரணமாவார்கள் என்று அமெரிக்க ஆய்வு நிலையமும் எதிர்வு கூறியிருந்தமையை சீன தூதரகம் சுட்டிக்காட்டியள்ளது.
இந்தநிலையில் அனைவரும் இணைந்து இந்த வைரஸை கட்டுப்படுத்த முன்வரவேண்டும். இதற்காகவே சீன அரசாங்கம் இலங்கை உட்பட்ட 100 நாடுகளுக்கு தமது உதவிகளை செய்து வருகிறது என்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை செய்தித்தாள் ஒன்றின் மீது சீனத் தூதரகம் அதிருப்தி -
Reviewed by Author
on
April 10, 2020
Rating:

No comments:
Post a Comment