முல்லைத்தீவில் மினி சூறாவளி! வீடுகள் பல சேதம் -
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் பெரியளவில் சேதமடைந்துள்ளன.
கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வந்த நிலையில், கடந்த இருநாட்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துவருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் வீசிய மினி சூறாவளியில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பூவரசன் குளம் பகுதியில் இரண்டு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப் பட்டு பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, நேற்றைய திகம் வவுனியாவில் வீசிய மினி சூறாவளியினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் மினி சூறாவளி! வீடுகள் பல சேதம் -
Reviewed by Author
on
April 10, 2020
Rating:

No comments:
Post a Comment