கிழக்கு மாகாண இந்து குருமார் ஒன்றியம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை -
கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் அரசாங்கத்தின் அறிவித்தல்களை ஏற்று வீடுகளில் இருந்து வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் இறை சிந்தனைகளில் ஈடுபடுமாறும் கிழக்கு மாகாண இந்து குருமார் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்து குருமாரும், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை ஏற்று அதனடிப்படையில் செயற்படுமாறும் கிழக்கு மாகாண இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கு.மு.உதயகுமார குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கிழக்கு மாகாண இந்து குருமார் ஒன்றியத்தினால் நிவாரண பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் ஏறாவூர்ப்பற்று, கிரான், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட படுவான்கரை பகுதி மக்களுக்கான ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண இந்து குருமார் ஒன்றியம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை -
Reviewed by Author
on
April 01, 2020
Rating:
Reviewed by Author
on
April 01, 2020
Rating:


No comments:
Post a Comment