மன்னாரில் மருத்துவ ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் வழங்கி வைப்பு-படங்கள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்களுக்கான சேவையில் பல அரச அரச சார்பற்ற நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில் 'மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின்' ஏற்பாட்டில் மருத்துவ ஆலோசனைக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட முகக் கவசங்கள் இன்று புதன் கிழமை மன்னாரில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த அமைப்பு சுமார் ஆயிரம் முகக் கவசங்களை பொது மக்களுக்கு வழங்கியுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மன்னார் நகர எல்லை பகுதியில் இக்கட்டான இச் சூழ்நிலையிலும் சுத்திகரிப்பு மற்றும் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுத்திகரிப்பு பணியாளர்களுக்கான முகக்கவசங்கள் மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் அவர்களிடம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இனையத்தின் இணைப்பாளர் எஸ்.திலிபன் வழங்கி வைத்துள்ளார்.
மேலும் மன்னார் மாவட்டத்தின் தபால் சேவையினை தற்போதைய இடர் காலத்திலும் மருந்துப் பொருட்கள் மற்றும் கிளினிக் அட்டைகளை விநியோகம் செய்கின்ற தபால் ஊழியர்களுக்கும் அவர்களுக்கான பாதுகாப்பை கருத்திற் கொண்டு அவர்களுக்கான முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கும் முக கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் , அவசர பிரிவு நோயாளி காவு வண்டி ஊழியர்களுக்கும் மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவினருக்கும் அரச சார்பற்ற சில தொண்டு நிறுவனங்களுக்கும் மேற்படி முககவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
April 22, 2020
Rating:

No comments:
Post a Comment