வட மாகாண வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்
வட மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளரின் ஏப்ரல் 20ஆம் திகதிய கடிதத்தின் மூலம் வவுனியாவில் சகல பிரதேச செயலகங்களிலும் வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் காலாவதியான சகல மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப் பத்திரங்களுக்கும் வரும் மே 31ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போதைய கோரோனா வைரஸ் பரம்பல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பொதுமக்கள் நெரிசலை ஏற்படுத்தாத வகையில் மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி வட மாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப் பத்திரத்தை வவுனியாவிலும் வட மாகாணத்தின் சகல பிரதேச செயலகங்களிலும் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்
Reviewed by Author
on
April 23, 2020
Rating:

No comments:
Post a Comment