வடமாகாணத்தில் வழமைக்கு திரும்பியுள்ள தபால் சேவைகள் -
வடமாகாணத்தில் தபால் சேவைகள் இன்றைய தினம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக வடமாகாண தபால் அதிபர் மது மதி வசந்த குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இன்றைய தினம் அனைத்து பிரதேசங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது போன்று வட மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டு அனைத்து தபால்களும் , தரம் பிரிக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி அதற்குரியநடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளன .
அதேபோல் கொழும்பில் இருந்தும் தபால் பொதிகள் இன்றைய தினம் வடமாகாணத்திற்கு எடுத்து வரப்படுகின்றன.
தபால் ரயில்களின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. ஆனால் பொதுமக்களுக்கு சேவையினை வழங்கும் முகமாக தபால் திணைக்களத்தின் வாகனங்கள் மூலம் தபால்கள் வடமாகாணத்துக்கு எடுத்து வரப்படும் நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவை நாளை முதல் எமது பிரதேசத்தில் தரம் பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .இதற்கு மேலதிகமாக தபால் திணைக்களத்தினால் சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மருந்து பொதிகள் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்க நடவடிக்கையினையும் நாம் மேற்கொண்டிருந்தோம்.
அதேபோல் தொலைபேசி சேவைகள் தொடர்பான அட்டைகள், அத்துடன் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன் கருதி அவர்களுக்கான ஓய்வூதியங்கள் வழங்கும் நடவடிக்கையினையும் வடமாகாண சபை திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
வடமாகாணத்தில் வழமைக்கு திரும்பியுள்ள தபால் சேவைகள் -
Reviewed by Author
on
April 23, 2020
Rating:

No comments:
Post a Comment