கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை! நிரூபித்து சாதனை படைத்த முள்ளியவளை மாணவிகள் -
கடந்த 2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் பல்வேறு மாணவர்கள் சிறந்த சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
அந்த வகையில், முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த, உயிரிழை அமைப்பின் பயனாளிகளான இரு மாற்றுத்திறனாளி மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
முள்ளியவளை, தன்னீருற்று மேற்கு பகுதியைச் சேர்ந்த கெங்காதரன் பவதாரணி கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்த நிலையில் அப்போதிலிருந்து சக்கரநாற்காலியில் வாழந்து வருகின்றார்.
குறித்த மாணவி நடந்து முடிந்த சாதாரண தரப் பரீட்சையில் 8 ஏ மற்றும் பி சித்தியினைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
மேலும், முள்ளியவளை, நாவலர் வீதி - முதலாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் விதுர்சிகா கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் போது தனது முள்ளந்தண்டு பகுதி காயமடைந்த நிலையில் சக்கரநாற்காலியிலேயே இதுவரை நாளும் வாழ்ந்து வருகின்றார்.
குறித்த மாணவி 6ஏ, பி மற்றும் 2 சி ஆகிய சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
மேலும் இந்த மாணவிகளுக்கு உதவி புரிந்த Lebara Foundation (LBR Foundation) நிர்வாகிகளுக்கும் அதன் நிகழ்சித்திட்ட முகாமையாளருக்கும் , கல்வி செயற்திட்ட உத்தியோகத்தருக்கும் மற்றும் உயிரிழை அமைப்பின் நிர்வாக சபையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளையில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த யோகநாதன் அனட் ஜெனீதா 3ஏ , பி , 3 சி மற்றும் 2 எஸ் சித்திகளையும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் கபிஷா 2 ஏ , 2 பி , 4சி சித்திகளையும், குமார் தமிழ் வாணன் 2 சி , 3 எஸ் தர சித்திகளையும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தவச்செல்வன் அறிவொளி பி , 4 சி , 3 எஸ் சித்திகளையும், கனகசுந்தரம் பிரிதிவ் சி, 4 எஸ் சித்திகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை! நிரூபித்து சாதனை படைத்த முள்ளியவளை மாணவிகள் -
Reviewed by Author
on
April 29, 2020
Rating:

No comments:
Post a Comment