வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசாரணை! சிவசேனா அமைப்பு கோரிக்கை -
சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் யாழ் அரியாலையில் உள்ள பில்தெனியா ஆலயத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்த சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பில்தெனியா ஆலயமானது ஒரு வயல் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யார்? அனுமதி கொடுத்தது. நல்லூர் பிரதேச சபை என்றால் அதனை நிர்வகிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே.
இந்த மத மாற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உள்ள கட்சியினர்தான் இந்த ஆலயம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள்.
எனவே இது தொடர்பில் விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசாரணை! சிவசேனா அமைப்பு கோரிக்கை -
Reviewed by Author
on
April 29, 2020
Rating:

No comments:
Post a Comment