அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாராபுரம் கிராமத்தை முழுமையாக விடுவிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை-அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்.

மன்னார் தாராபுரம் கிராமம் கடந்த 7 ஆம் திகதியில் இருந்து முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு எவ்வித தொற்றும் இல்லை என மருத்துவ அறிக்கை வந்துள்ள நிலையில் குறித்த கிராமத்தை  திங்கட்கிழமை (13) முதல் முழுமையாக விடுவிப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் கோறியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை(13) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

தமிழ் சிங்கள புது வருடத்தை மக்கள் தற்போது வீடுகளில் இருந்து கொண்டாடி வருகின்றனர்.கொரோனா தாக்கத்தில் இருந்து எங்களை பாதுகாக்க நாங்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளோம்.

மேலும் மாவட்டத்தில் அத்தியாவசிய உலர் உணவு விநியோகம் மாவட்டத்தில் மூன்று நிலையங்களுக்கு ஊடாக விநியோகித்து வருகின்றோம். சதொசா நிறுவனம் மாவட்டத்தில் 5 கிளைகளை கொண்டுள்ளது.

பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது. அதற்கு மாவட்டச் செயலகத்தின் ஊடாக நிதியை வழைங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

பொது மக்களுக்கான உலர் உணவு வினியோகம் மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

மேலும் தனியார் ஊடாகவும் உணவு விநியோகம் இடம் பெற்று வருகின்றது.சில தனியார் நிறுவனங்கள் விலைத் தலம்பல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு பணித்துள்ளேன்.உணவுப்பொருட்களை எக்காரணம் கொண்டும் அதிக விலைக்கு விற்க வேண்டாம் என்று. அந்த வகையில் சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் விலை பாதீப்பாக உள்ளது.

மன்னாரிற்கு மிகவும் முக்கியமான உணவான கீரிச்சம்பா போதிய அளவில் எங்களிடம் இருக்கின்றது.எங்களிடம் ஏற்கனவே 943 மெற்றிக்தொன் நெல் கையிருப்பில் உள்ளது.

எனவே மன்னார் மாவட்டத்தை பொருத்த  வகையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது.கோதுமை மா வவுனியாவில் இருந்து கிடைப்பதினால் எமக்கு தட்டுப்பாடு இல்லை.

அங்கர் பால் மா எங்களுக்கு தற்போது தட்டுப்பாடாக உள்ளது.எனினும் மன்னார் மாவட்டத்தில் போதுமான அளவு பசுப்பால் உள்ளது.அதனை நாங்கள் சரியான முறையில் பயண் படுத்துவோமாக இருந்தால் பொது மக்களுக்கு அந்த குறைபாடு இல்லை.மேலும் மாவட்டத்தில் அரசாங்கத்தினால் பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சமூர்த்தி ஊடாக 23 ஆயிரத்து 117 பயணாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பணவில் இது வரையில் 20 ஆயிரத்து 790 பயணாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

103.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சமூர்த்தி பட்டியலில் காத்திருப்போர் பட்டியிலுக்கு அமைவாக சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டதிற்கு அமைவாக 8 ஆயிரத்து 164 பேரூடைய பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கான அனுமதியும் கிடைக்கப் பெற்று இது வரை அவர்களில் 7 ஆயிரத்து 146 பயணாளிகளுக்கு 36.23 மில்லியன் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக முதியோர்களுக்கான கொடுப்பணவு, மாற்றுத்திரனாளிகளுக்கான கொடுப்பணவு, சிறு நீரகம் பாதீக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பணவு என்ற அடிப்படையில் 3 ஆயிரத்து 207 பேர்களுக்கான 3 ஆயிரத்து 86 பேரூக்கான கொடுப்பணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

-மேலும் தாராபுரம் கிராமத்தில் 2 கிராம அலுவலகர்கள் பிரிவை கொண்ட பகுதி முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.

புத்தளத்தில் இருந்துவருகை தந்த ஒருவரினால் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாக்கப்படார் என்ற காரணத்தினால் குறித்த தாராபுரம் கிராமம் கடந்த 7 ஆம் திகதியில் இருந்து முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.

வைத்திய அதிகாரியின் அறிக்கையின் படி குறித்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சினை இல்லை என அந்த அறிக்கையின் படி உரிய அதிகாரிகளுக்கு குறித்த கிராமத்தை திங்கட்கிழமை (13) முதல் முழுமையாக விடுவிப்பதற்கு கோரியிறுக்கின்றேன்.

அதன் அடிப்படையில் தாராபுரம் கிராம மக்களும் முழுமையாக விடுவிக்கப்பட உள்ளனர்.எமது மாவட்டத்தை பொறுத்த வகையில் கொரோனா வைரஸின் பாதீப்பு இது வரையில் இல்லை.

மேலும் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மின்சக்தி உற்பத்தி வேலைத்திட்டம் சுமார் 30 கோபுரங்களை கொண்டு அமைக்கப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலைய வேலைத்திட்டங்கள் ஏற்கனவே இடை நிறுத்தி வைக்கப்பட்டது.குறிப்பாக இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் வேளை செய்வதினால் கொரோனா வைரஸ் பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தினால் எனது முயற்சியினால் குறித்த வேலைத்திட்டங்கள் இடை நிறுத்தி வைக்கப்பட்டது.தற்போது குறித்த பணிகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால் பொது மக்கள் மத்தியில் அச்சி நிலை ஏற்பட்டுள்ளது.நாங்கள் அவ்விடையம் தொடர்பில் திட்ட பணிப்பாளரை அழைத்து இவ்விடையம் தொடர்பாக அறிவித்து உள்ளேன்.அங்கு கடமை அற்றியவர்கள் எவரும் வெளியில் வந்து வேலை செய்ய முடியாது.

அவர்களின் நிறுவனத்தினுள் இருந்தே அவர்கள் செயற்பட முடியும்.அவர்கள் வீதிகளில் நடமாட அல்லது அல்லது கிராம மக்களுடன் உறவாட அனுமதி இல்லை.

இவ்விடையம் தொடர்பாக பொலிஸ் , இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் தாராபுரம் கிராமத்தை முழுமையாக விடுவிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை-அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ். Reviewed by Author on April 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.