கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே மலேசியாவில் 200 வெளிநாட்டவர்கள் கைது
மலேசியாவின் Petaling Jaya பகுதியில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில்
கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம் மற்றும்
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என மலேசிய குடிவரவுத்துறை இயக்குனர்-ஜெனரல்
கைரூல் டஸ்மி தவுத் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா தொற்று காரணமாக Petaling Jaya பகுதியில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சூழலுக்கு இடையே இந்த தேடுதல் வேட்டை நடந்துள்ளது.
பாதுகாப்பு கவச உடையுடன் நுழைந்த அதிகாரிகள் வெளிநாட்டினரின் ஆவணங்கள் பரிசோதித்திருக்கின்றனர். இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கான உணவு, மருத்துவ உதவிகள் முறையாக செய்யப்படும் என கைரூல் டஸ்மி தெரிவித்திருக்கிறார்.
மக்கள்
நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இதுவரை
நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் முறையாக பதிவுச் செய்யாமல் பணியாற்றிய,
தங்கியிருந்த 1,763 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே மலேசியாவில் 200 வெளிநாட்டவர்கள் கைது
Reviewed by Author
on
May 23, 2020
Rating:

No comments:
Post a Comment