மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி முகக்கவசம் கையளிப்பு.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் இன்று (22) வெள்ளிக்கிழமை காலை ஒரு தொகுதி முகக் கவசங்களை கையளித்துள்ளது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் க.செந்தூர்பதி ராஜா அவர்களிடம் கையளித்தார்.
இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி முகக்கவசம் கையளிப்பு.
Reviewed by Admin
on
May 22, 2020
Rating:

No comments:
Post a Comment