மன்னாரில் 25 குடும்பங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு -PHOTOS
"கொரோனா" அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் காரணமாக தொழில் வாய்ப்பை இழந்துள்ள அன்றாட கூழி தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 25 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை(10) ஒன்று கூடுவோம் அமைப்பின் (சிறீ லங்கா யுனைட்) மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜோசப் நயன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமங்களான அருகம் குண்று, சாந்திபுரம் ,ஜிம்றோன் நகர், செளத்பார் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 25 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மா ,சீனி,தேயிலை ,கிழங்கு வெங்காயம் உட்பட 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பகிர்ந்து கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த உதவும் செயற்பாடானது ஒன்று கூடுவோம் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர்கள் ஊடாக 25 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மன்னார் நிருபர்
10-05-2020
மன்னார் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமங்களான அருகம் குண்று, சாந்திபுரம் ,ஜிம்றோன் நகர், செளத்பார் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 25 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மா ,சீனி,தேயிலை ,கிழங்கு வெங்காயம் உட்பட 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பகிர்ந்து கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த உதவும் செயற்பாடானது ஒன்று கூடுவோம் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர்கள் ஊடாக 25 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மன்னார் நிருபர்
10-05-2020
மன்னாரில் 25 குடும்பங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு -PHOTOS
Reviewed by Author
on
May 10, 2020
Rating:

No comments:
Post a Comment