கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... தவிக்கும் தமிழகத்தின் தலைநகரம் -
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,023ஆக உயர்ந்துள்ளது.
இதில், மொத்தம் 50 சதவீத(1458) பாதிப்பு சென்னையில் தான் உள்ளது. சென்னையில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் இருப்பதால் இது வேகமாக பரவி வருவதாக தெரிகிறது.
சென்னையின் ராயபுரம் என்ற சிறிய பகுதியில் 273பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தி.ரு.விக நகரில் 324பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளான ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவை கொரோனா நோயளிகளால் நிரம்பியுள்ளது.
மேலும், தொடர்ந்து கொரோனா நோயளிகளை எங்கே அனுமதிப்பது மருந்துவம் எப்படி பார்ப்பது என்பது குறித்து அரசு திணறி வருகிறது.
திடீரென்று கொரோனா நோயளிகள் அதிகரித்ததே இடப்பற்றாக்குறைக்கு காரணம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து இனியும் நோயளிகள் அதிகரித்தால் எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால், கல்லூரிகள், திருமணம் மண்டபங்கள் உள்ளிட்டவை கொரோனா நோயாளிகளுக்கான வார்ட்டுகளாக மாற்றும் பணி திவிரமாக நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... தவிக்கும் தமிழகத்தின் தலைநகரம் -
Reviewed by Author
on
May 04, 2020
Rating:

No comments:
Post a Comment