மன்னாரில் மீண்டும் தீ விபத்து ஜிம்றோன் நகரில் முற்றாக தீக்கிரையாகிய வீடு- வீடியோ,படங்கள்
மன்னார் எமில் நகர் கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட ஜிம்றோன் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று 04-05-2020 இன்று மதியம் முழுவதுமாக எரிந்து தீக்கிரையாகி உள்ளது.
கணவன் காலையில் கடற்தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் மனைவி சமைத்துக் கொண்டிருந்த பொழுது திடீரென குறித்த வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது.
கற்கல் அடுக்கப்பட்டு ஓலையால் மேயப்பட்ட வீடு என்பதால் குறித்த வீடு முழுவதும் வேகமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அயலவர்கள் மற்றும் நகர சபையின் தண்ணீர் பவுசரின் உதவியுடன் குறித் தீ அணைக்கப்பட்ட போதும் வீடு முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
மூன்று பிள்ளைகளை கொண்ட மிகவும் நடுத்தர குடும்பதை சேர்ந்த இக் குடும்பம் தற்போது வீடு மாத்திரம் அல்லாமல் பாவனைக்கு என ஆடைகளோ அத்தியாவசிய உணவு பொருட்களோ எந்த ஒரு பொருளும் இன்றி என்ன செய்வது என அறியாத நிலையில் உள்ளனர்.
கிராம சேவகர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் குறித்த பகுதிக்கு வருகை தந்து நிலைமை தொடர்பான விடயங்களை பார்வையிட்டுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வசதி படைத்த குடும்பங்களே மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் வாழுகின்ற போது இக்குடும்பம் அனைத்தையும் இழந்து நிற்கின்றது.
இக் குடும்பத்துக்கு உதவ விரும்புபவர்கள் 0772658949 தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த உதவியை செய்ய முடியும்.

Reviewed by Author
on
May 04, 2020
Rating:

No comments:
Post a Comment