மன்னார் நகரில் 550 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது-மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்
ஆசிய வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நகர சபை பிரிவில் சுமார் 550 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேளைத்திட்டங்களுக்கு இடத்தை கையளிக்கும் வகையில் துரித வேளைத்திட்டம் இடம் பெற்று வருவதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
இவ் விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் சுமார் 550 மில்லியன் ரூபா நிதியில் மன்னார் நகரப்பகுதி அபிவிருத்தி செய்யப்பவுள்ளது.
ஆதற்கு அமைவாக சுமார் நூறு கடைகள், வாகனத்தரிப்பிடம், செயற்கை நீர் வீழ்ச்சி ,பார்வையாளர் அரங்கு , சுப்பர் மார்க்கெட் மற்றும் அதனுடன் இணைந்த திரையரங்கு கே.எப்.சி போன்றவை நிர்மானிக்கப்படஉள்ளது.
இடத்தை கையளிக்கும் வகையில் முதல் கட்ட பணிகள் மன்னார் நகர சபையால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பஸார் பகுதி 'சைனா பஜார்' பகுதியில் காணப்பட்ட கடைத்தொகுதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தற்போது புதிய கடை வழங்கப்பட்டுள்ளது.தற்போது கடைகள் அகற்றப்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது.மன்னார் நகரை அழகு படுத்தி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் முயற்சியின் மன்னார் நகர சபை செயல்பட்டு வருகின்றது.
-குறித்த செயல்திட்டத்திற்கு மன்னார் நகர மக்கள்,வர்த்தகர்கள் மன்னார் நகர சபைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேலும் தெரிவித்தார்.</div>
மன்னார் நகரில் 550 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது-மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்
Reviewed by Admin
on
May 09, 2020
Rating:

No comments:
Post a Comment