குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்கள நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் மக்கள் பின்பற்ற வேண்டும் என குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைதருவோர் தமக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக அலுவலக நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 070 7101060, 070 7101070 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு மக்கள் தமக்கான நாள் மற்றும் நேரத்தை ஒதுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்களை தவிர குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணைய முகவரியூடாக பிரவேசித்து தினம் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்கள நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
Reviewed by Author
on
May 09, 2020
Rating:

No comments:
Post a Comment