ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்-செல்வம் அடைக்கலநாதன்
மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் கடந்த 30
வருடங்களுக்கு மேலாக ஒயாது ஒலித்த குரல் இன்று மௌனித்து விட்டது என தமிழ்
தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
தெரிவித்துள்ளார்.
அவர் இன்று புதன் கிழமை விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்......
இலங்கை
தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்கள்
காலமானார் என்ற செய்தி ஆழந்த வேதனைய ஏற்படுத்தி உள்ளது.
ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் 30 வருடங்களுக்கு மேலாக ஒயாது ஒலித்த குரல் அவருடையது.
அவருடைய பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமானை போல் மலையக மக்களை நேசித்த உன்னத மனிதன் ஆறுமுகன் தொண்டமான்.
அன்னாரின்
மறைவுத் துயரில் வாடும் குடும்பத்தாருக்கும் மலையக மக்களுக்கும் என்
சார்பாகவும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பிலும் ஆழந்த
அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என குறித்த இரங்கல்
செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்-செல்வம் அடைக்கலநாதன்
Reviewed by Author
on
May 27, 2020
Rating:

No comments:
Post a Comment