அரசாங்கத்திற்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பு ஏற்படுத்திய தொண்டமானின் மறைவு.....
காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியத் தூதுவரை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்த செய்தியை கேள்விப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தொண்டமானின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்தார்.
அவரின் மறைவு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பென அங்கு செய்தியாளர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
அரசாங்கத்திற்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பு ஏற்படுத்திய தொண்டமானின் மறைவு.....
Reviewed by Author
on
May 27, 2020
Rating:

No comments:
Post a Comment