ஆஸ்திரேலியாவில் கொரோனா: அச்சத்தில் புலம்பெயர்ந்தவர்களும் அகதிகளும்
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களும் அகதிகளும் கொரோனா ஏற்படுத்தும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எண்ணுவதாக புதிய கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
130 புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் இடையே நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில், 77 சதவீதமானோர் கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக கடும் அச்சம் கொண்டுள்ளனர்.
அதுவே, ஆஸ்திரேலியர்களிடையே நடந்த மற்றொரு கணக்கெடுப்பில், 57 சதவீதமான ஆஸ்திரேலியர்களே கொரோனா குறித்து பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.
மெல்பேர்னில் உள்ள மருத்துவமனையில், கொரோனா எதிரான போராட்டதில் இசை வல்லுநராக பணியாற்றி வருகிறார்.
ஈரானிய அகதியான ஹதி முகமதி. இந்த சூழலில், ஹதி அவரது குடும்பத்தின் உடல்நலன் குறித்தும் குழந்தைகளின் கல்வி குறித்தும் தொடர்ச்சியாக கவலைக் கொண்டுள்ளார்.
“இது அனைவருக்கும் கவலையான நேரம். என்ன நடக்கப் போகிறது என எங்களுக்கு தெரியவில்லை,” என அவர் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா: அச்சத்தில் புலம்பெயர்ந்தவர்களும் அகதிகளும்
Reviewed by Author
on
May 10, 2020
Rating:

No comments:
Post a Comment