ஆக்காட்டி வெளி கிராமத்தில் உள்ள வீட்டு வளாகத்தினுள் நேற்று இரவு சென்று மாட்டை பிடிக்க முற்பட்ட முதலை மடக்கி பிடிப்பு-Photo and Video
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பரிவுக்குற்பட்ட ஆக்காட்டிவெளி கிராமத்தில் உள்ள வீட்டு வளாகத்தின் பின் பகுதியில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் சுமார் 6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை வீட்டின் உரிமையாளர் கிராம மக்களின் உதவியுடன் பிடித்து கட்டியுள்ளனர்.
குறித்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் நீண்ட நேரமாக குறைத்துக்கொண்டு இருந்ததை அவதானித்த வீட்டின் உரிமையாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) இரவு 11.30 மணியளவில் வீட்டில் பின் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.
இதன் போது வீட்டின் பின் பகுதியில் மாடுகள் அடைக்கப்பட்ட பகுதியில் பாரிய முதலை ஒன்று காணப்படுவதை அவதானித்த குறித்த வீட்டின் உரிமையாளர் அயலவர்களுக்கு தெரியப்படுத்தினார்.
இதன் போது அயலவர்களின் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் சுமார் 6 அடி நீளம் கொண்ட குறித்த முதலை பிடித்து கட்டப்பட்டது.
குறித்த முதலை மாட்டை பிடித்து உண்ண வந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸார் மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட போதும் யாரும் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-மன்னார் நிருபர்-
(11-05-2020)
குறித்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் நீண்ட நேரமாக குறைத்துக்கொண்டு இருந்ததை அவதானித்த வீட்டின் உரிமையாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) இரவு 11.30 மணியளவில் வீட்டில் பின் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.
இதன் போது வீட்டின் பின் பகுதியில் மாடுகள் அடைக்கப்பட்ட பகுதியில் பாரிய முதலை ஒன்று காணப்படுவதை அவதானித்த குறித்த வீட்டின் உரிமையாளர் அயலவர்களுக்கு தெரியப்படுத்தினார்.
இதன் போது அயலவர்களின் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் சுமார் 6 அடி நீளம் கொண்ட குறித்த முதலை பிடித்து கட்டப்பட்டது.
குறித்த முதலை மாட்டை பிடித்து உண்ண வந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸார் மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட போதும் யாரும் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-மன்னார் நிருபர்-
(11-05-2020)
ஆக்காட்டி வெளி கிராமத்தில் உள்ள வீட்டு வளாகத்தினுள் நேற்று இரவு சென்று மாட்டை பிடிக்க முற்பட்ட முதலை மடக்கி பிடிப்பு-Photo and Video
Reviewed by Author
on
May 11, 2020
Rating:

No comments:
Post a Comment