அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட Facebook நிறுவனம்


2018 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு முகப்புத்தகதில் பதிவிடப்பட்ட சில வன்முறை சார்ந்த கருத்துக்களும் துஸ்பிரயோக பதிவுகளும் காரணமாக இருந்திருக்கலாம் என சமூக வலைப்பின்னலின் செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தோனேசியா மற்றும் கம்போடியாவில் நடைபெற்ற மனித உரிமை செயற்பாடுகள் குறித்த சுயாதீன மதிப்பீட்டு அறிக்கையை நேற்று அந்த அமைப்பு (12) வெளியிட்டது.

அதிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

´உண்மையான மனித உரிமை விடயங்கள் தொடர்பான விடயங்களை அங்கீகரித்து மன்னிப்பு கோருகிறோம்.´ எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூர் மொழி திறன்களுடன் உள்ளடக்க மதிப்பீட்டாளர்களை கடமைகளில் ஈடுபடுத்தல், வெறுக்கத்தக்க பேச்சை தானாகவே கண்டறிந்து தவறான உள்ளடக்கத்தை பரப்புவதைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை செயற்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளை எடுக்குமாறு பேஸ்புக் நிறுவனம் எடுத்துரைத்துள்ளது.

உள்ளடக்க அளவீடு மற்றும் தவறான செய்திகளின் பரவலை தணிப்பது குறித்து குழுவின் கடமையாக அமைய வேண்டும் எனவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட Facebook நிறுவனம் Reviewed by Author on May 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.