சீன மற்றும் இந்திய எல்லை பிரச்சினையை தீர்ப்பதாக அமெரிக்காவிற்கு பதிரளித்த இந்தியா ....!!!
இந்திய - சீனா எல்லையான லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள பாங்காங் ஏரி அருகே சீனா வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை தடுத்த இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனை தற்போது பூதாகரமாக மாறியுள்ளது. இதனால் தற்போது சீனா எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் இதற்கு பதிலடி தரும் வகையில் தனது படைகளை குவித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையெ போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர் இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது இந்தியா சீனா இடையே எழுந்துள்ள எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவோ அல்லது இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யவோ அமெரிக்கா தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் வேண்டுகோள்களுக்கு பதிலளித்துள்ள இந்தியா, சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்டா, தூதகர ரீதியில் இந்தியா - சீனா இடையிலான எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதுதொடர்பாக பல ஒப்பந்தங்களை போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் எல்லையில் நமது படைகள் சிறப்பாக செயல்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்வதாக தெரிவித்த அவர், இந்திய தலைமையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியா தனது எல்லையையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
சீன மற்றும் இந்திய எல்லை பிரச்சினையை தீர்ப்பதாக அமெரிக்காவிற்கு பதிரளித்த இந்தியா ....!!!
Reviewed by Author
on
May 29, 2020
Rating:

No comments:
Post a Comment