‘அழைத்தார் பிரபாகரன்’என்று புத்தகம் எழுதிய அப்துல் ஜப்பார்......!!
2002ல் ஈழத்தில் நடைபெற்ற உலக பத்திரிக்கையாளர்கள் மாநாட்டிற்கு BBC தமிழ் சார்பாக சென்றிருந்த பத்திரிக்கையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் தனக்கு ஈழத்தில் கிடைத்த அனுபவங்களை ‘அழைத்தார் பிரபாகரன்’என்று புத்தகமாக எழுதியுள்ளார்-வார்த்தைக்கு வார்த்தை புலிகளும் மேதகு இறைவனான பிரபாகரன் அவர்களும் தன்னை எவ்வாறு கவனித்தார்கள் என்பதை வர்ணித்திருக்கிறார்.
ஒருமுறை சாப்பிட அமர்கிறார்கள், அசைவ உணவு பரிமாறப்படுகிறது. அப்துல் ஜப்பார் உணவை சாப்பிட தயங்குவது கண்டு மேதகு சொன்னாராம் தயக்கம் வேண்டாம் ஐயா இது உங்களுக்கு (ஹலால்) ஆகுமாகப்பட்ட உணவுதான் என்றாராம்-
புலிகள் தங்கள் விருந்தாளிகளை எவ்வாறு கவுரவிப்பர் என்பதற்கான இதை நான் சொல்லவில்லை மாறாக இஸ்லாமிய மார்க்கதை ஏற்ற தமிழர்களை புலிகள் எப்படி நடத்தினார்கள் என்பற்க்கு இது ஒரு ஆகச்சிறந்த சான்று ஏன் விடுதலை புலிகளின் படையணிகளில் ஒன்று இம்ரான் பாண்டியன் படையணி ஏன் மேதகு தலைவரின் மெய்க்காப்பாளர்களே பல இஸ்லாமிய மார்க்கதை ஏற்ற தமிழர்கள் இருந்துள்ளனர் -தற்கொலை செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது இருந்தும் தமிழர் மானமே முக்கியம் என எண்ணிய பல இஸ்லாமிய கரும்புலிகள் உடல் சிதறி இறந்தனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த புத்தகத்தை அனைவரும் படிப்பது நல்லது.
‘அழைத்தார் பிரபாகரன்’என்று புத்தகம் எழுதிய அப்துல் ஜப்பார்......!!
Reviewed by Author
on
May 29, 2020
Rating:

No comments:
Post a Comment