அண்மைய செய்திகள்

recent
-

முஸ்ஸீம் மக்களுக்கான அடிப்படை தேவைகளை அரசாங்கம் தொடர்ந்தும் மீறிக் கொண்டு இருக்குமா?-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் ஆதங்கம்.

இலங்கையில் ஜனநாயகம் காணப்படுகின்றதா?என்கின்ற சந்தேகம் நிலவுகின்றது. இலங்கையில் முஸ்ஸீம் மக்களுக்கான அடிப்படை தேவையை அரசாங்கம் தொடர்ந்து மீறிக் கொண்டு இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


இலங்கையில் நிம்மதியுடன் வாழ்ந்த சிறுபான்மை இன மக்களுக்கு தற்போது ஒரு கோள்விக்குறியான நிலமை தோண்றியுள்ளது.

அதிலும் குறிப்பாக முஸ்ஸீம் சமூகத்தை பொருத்த மட்டில் இன்று அவர்களின் நிலைப்பாடு குறித்து சாதாரண மக்களிடம் கேட்கின்ற போது அவர்களிடம் ஒரு அச்ச நிலை காணப்படுகின்றது.

இலங்கையில் ஜனநாயகம் காணப்படுகின்றதா?என்கின்ற சந்தேகம் நிலவுகின்றது.இங்குள்ள முஸ்ஸீம் மக்களுக்கான அடிப்படை தேவையை அரசாங்கம் தொடர்ந்து மீறிக் கொண்டு இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்ன என்றால் அண்மையில் நாங்கள் அனைவரும் அறிந்த விடையம் உலக நாடுகளையே அச்சுரூத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள இந்த நிலையில் உலகத்தில் உள்ள சுமார் 150 ற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் பல இலட்சக்கணக்கான இறப்பு சம்பவித்துள்ளது.பல ஆயிரம் மக்கள் இறந்த நாடுகளில் கூட குறிப்பாக அமெரிக்கா அல்லது பிரான்ஸ் நாட்டை எடுத்துக் கொண்டால் என்ன குறித்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவர்களின் இறுதிக் கிரிகைகள் அவர்களின் சமய முறைப்படி நடாத்துவதற்கான வழி வகைகள் செய்து கொடுக்கப்படுகின்றது.

ஆனால் இன்று ஒரு முஸ்ஸீம் இறந்து விட்டால் அவருக்கு நான்கு கடமைகள் காணப்படுகின்றது. அந்த கடமைகள் நிறை வேற்றப்பட்டதன் பின்னர் ஒரு ஜனாஸா அடக்கம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.




(மன்னார் நிருபர்)

(12-05-2020)


முஸ்ஸீம் மக்களுக்கான அடிப்படை தேவைகளை அரசாங்கம் தொடர்ந்தும் மீறிக் கொண்டு இருக்குமா?-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் ஆதங்கம். Reviewed by Author on May 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.