23 மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய 23 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் இன்று (18) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை தொடர்ந்தும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் மக்களில் வாழ்கைளை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் படி மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய நடைப் பயணமாக செல்ல முடியும்.
இதேவேளை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் கோரிக்கைக்கு அமைய பஸ் வசதிகளும், ரயில் வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று (18) 19 தடவைகள் ரயில் போக்குவரத்து இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்களில் ஏற்கனவே ஆசனங்களை முன்பதிவு செய்துக்கொள்ளாத ஊழியர்களுக்கு சில நிபந்தனைகளுடன் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
23 மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு
Reviewed by NEWMANNAR
on
May 18, 2020
Rating:

No comments:
Post a Comment