முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நாளை காலை நினைவுகூரல்- ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு
முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலம் இடம்பெற்று 11ஆவது ஆண்டு பூர்த்தியாகின்ற நிலையில் நாளை திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நினைவுகூரல் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் தமக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், அவர்களுக்கு நாளைய தின நிகழ்வுகள் குறித்து தெளிவுபடுத்தியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய நாளைய தினம் காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் பொதுச்சுடர் ஏற்றப்படவுள்ளதுடன் அகவணக்கம் செலுத்தப்படவுள்ளதாகவும் இதன்போது, கொள்கைப் பிரகடனமும் வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நினைவுகூரல் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் தமக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், அவர்களுக்கு நாளைய தின நிகழ்வுகள் குறித்து தெளிவுபடுத்தியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய நாளைய தினம் காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் பொதுச்சுடர் ஏற்றப்படவுள்ளதுடன் அகவணக்கம் செலுத்தப்படவுள்ளதாகவும் இதன்போது, கொள்கைப் பிரகடனமும் வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நாளை காலை நினைவுகூரல்- ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
May 18, 2020
Rating:

No comments:
Post a Comment