நாட்டின் சில பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட மஞ்சள் வெட்டுக்கிளிகள்
மஞ்சள் புள்ளிகளை கொண்ட வெட்டுக்கிளிகள் நாட்டின் சில பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மாவனெல்ல பகுதியிலும் வெட்டுக்கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண விவசாய பணிப்பாளர் I.D. குணவர்தன குறிப்பிட்டார்.
குருநாகல் – மாவத்தகம பகுதியில் முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த வெட்டுக்கிளிகள், பின்னர் மீரிகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் சில பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட மஞ்சள் வெட்டுக்கிளிகள்
Reviewed by NEWMANNAR
on
June 04, 2020
Rating:

No comments:
Post a Comment