மன்னார் திருக்கேதீச்சர கோவில் கும்பாவிசேகம் பிற்போடப்பட்டுள்ளது-
மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீச்சரம் திருத்தலத்தின் கும்பாபிசேக திருவிழா எதிர் வரும் 10 ஆம் திகதி இடம் பெறாது என திருக்கேதீச்சர திருத்தல திருப்பணிச் சபையின் இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,
-நாட்டில் ஏற்பட்டுள்ள 'கொரோனா' வைரஸ் தொற்று காரணமாக அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தால் எதிர் வரும் 10 ஆம் திகதி (10-06-2020) நடை பெறுவதாக இருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா கும்பாபிசேக திருவிழா அன்றைய தினம் நடை பெறாது.
மீண்டும் கும்பாபிசேகம் நடாத்துவது தொடர்பான விபரங்களும் திகதியும் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் 'கொரோனா' வைரஸ் தாக்கம் இன்னும் நாட்டில் முற்றாக குறைவடையாத நிலையில் வெளி இடங்களில் இருந்து பக்தர்கள் திருவிழாவுக்கு வருவது பக்தர்கள் ஒன்று கூடுவதில் பாரிய சிரமங்களை அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்தும்.
ஆகவே இது போன்ற பல விதமான காரணங்களை ஆராய்ந்து இந்த மாதம் 10 திகதி நடை பெற இருந்த கும்பாபிசேக திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் மீண்டும் கும்பாபிசேகம் நடாத்துவது தொடர்பான விபரங்களும் திகதியும் விரைவில் அறிவிக்கப்படும் என திருக்கேதீச்சரதிருப்பணிச்சபையின் இணைச் செயலாளர் எஸ்.எஸ். இராமகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.
(மன்னார் நிருபர்)
(03-06-2020)
மன்னார் திருக்கேதீச்சர கோவில் கும்பாவிசேகம் பிற்போடப்பட்டுள்ளது-
Reviewed by Author
on
June 03, 2020
Rating:

No comments:
Post a Comment