பொலிஸ் உத்தியோகத்தர்கள் 20 பேர் உடனடியாக இடமாற்றம்...
சேவையின் தேவை நிமித்தம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 20 பேர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 12 பேர் உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் 20 பேரை இடமாற்றம் செய்ய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதற்கமைய, பொலிஸ் தலைமையகத்திலிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ஜீ.கே.பீ. அபோன்சு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்....
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திலிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.சீ. மெதவத்த நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 12 பேருடன், 06 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 02 உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது....

No comments:
Post a Comment