மட்டகளப்பில் பற்றியெரிந்த பண்ணை காணி...
மட்டக்களப்பு- திராய்மடு பகுதியிலுள்ள தனியார் பண்ணை காணி ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென குறித்த பண்ணை காணி தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியிலுள்ள மக்கள் தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். மேலும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அறிவிக்கப்படுகின்றது.....
மட்டகளப்பில் பற்றியெரிந்த பண்ணை காணி...
Reviewed by Author
on
July 20, 2020
Rating:

No comments:
Post a Comment