நடிகர் அஜித்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், நடிகா் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை காவலர்கள், நீலாங்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்..
அதிகாரிகளின் உத்தரவின்பேரில் காவலர்களும் வெடிகுண்டு கண்டறியும்
பிரிவினரும் நடிகர் அஜித்தின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். பல மணி நேரம்
நடைபெற்ற இச்சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப்பொருளும்
கண்டெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....

No comments:
Post a Comment