பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது - பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர்...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் ஆரம்பித்து நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பரீட்சைகள் சில பிற்போடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன பரிசோதகர்களுக்கான தடைதாண்டல் பரீட்சை 2017(2020), அதிபர் சேவையின் இரண்டாம் தர அதிகாரிகளுக்கான தடைதாண்டல் பரீட்சை 2019 (2020) உள்ளிட்ட சில பரீட்சைகளே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளன.
குறித்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்..
பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது - பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர்...
Reviewed by Author
on
July 17, 2020
Rating:

No comments:
Post a Comment