கொரோனா பரிசோதனைக்குப் பின் 94 இந்தோனேசிய குடியேறிகள் நாடுகடத்தப்பட்டனர்...
மலேசியாவின் Tawau துறைமுகத்திலிருந்து இந்தோனேசியாவின் Nunukan துறைமுகத்திற்கு சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 94 இந்தோனேசியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக இவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டது என மலேசியாவின் சாபா மாநில தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இயக்குனர் ஷலீஹா ஹபிப் யூசப் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் இந்த ஆண்டு மலேசியாவின் சாபா மாநிலத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 4,845 ஆக உயர்ந்துள்ளது.
உலகெங்கும் கொரோனா பெருந்தொற்று சூழல் நிலவிவரும் இச்சூழலிலும், மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கண்டறியும் தேடுதல் நடவடிக்கைகளையும் அவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளையும் மலேசிய அரசு மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment