வாகனவிபத்தில் 18 மாடுகள் பலி..........!
கிளிநொச்சி – பரந்தன் ஏ-35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் இன்று (09) காலை டிப்பர் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்துள்ளன.
விசுவமடு பகுதியில் இருந்து ஏ-35 வீதியூடாக வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மாடுகளை மோதித் தள்ளி விட்டு குறித்த தப்பிச் சென்றுள்ளதாக இதனை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கைக்கு உட்படாத பகுதியான வெலிக்கண்டல் பகுதியில் வைத்து பராமரித்து வருகின்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது...
வாகனவிபத்தில் 18 மாடுகள் பலி..........!
Reviewed by Author
on
July 09, 2020
Rating:

No comments:
Post a Comment