எங்களுடைய போராட்ட வரலாற்றிலே எங்களுடைய தலைவர் எதற்காக உருவாக்கினார்களோ அந்த கோட்பாட்டோடு இன்றுவரைக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பயணிக்கின்றது.
எங்களுடைய ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டாலும் தொடர்ந்து அரசியல் செயற்பாடுகள் தொடர வேண்டும்...
மக்களுக்காக அரசியல் பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காக உங்களின் முன் நிற்கின்றோம் என முன்னாள் கடற்புலி தளபதி அன்புராஜ் தெரிவித்தார்.
தமிழ்
தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களான செல்வம் அடைக்கலநாதன்,
மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பரப்புரைக்கூட்டம் புதன் கிழமை மாலை
மன்னார் வங்காலையில் இடம் பெற்றது பெற்றது.
இதன்
போது கலந்து கொண்டு உரையாற்று கையிலே விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட
மாவட்ட முன்னாள் கடற்புலி தளபதி அன்புராஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
நாங்கள் போராளிகளாக சேர்ந்து மக்களுடன் இணைந்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கினோம். எங்களுடைய
தேசியத்துக்காக, மண்ணிற்காக,மொழிக்காக, உரிமைக்காக பலம் வாய்ந்த 22
பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கி பாராளுமன்றம் அனுப்பினோம்.
இறுதியிலே போராட்டம் மெளனித்த பிறகு எங்களுடைய மக்களினுடைய செயற்பாடுகள் மாறுபட்டதாக மாறிக்கொண்டிருக்கின்றது. படிப்படியாக இரண்டு இரண்டாக குறைந்து இன்றைக்கு 14 இலே வந்து நிற்கின்றது.
நாங்கள் விடமுடியாது. நாங்கள் மீண்டும் பலத்தை சேர்க்க வேண்டியதாக இருக்கின்றது.
வாக்குகளை
சின்னா பின்னமாக சிதைப்பதற்காக, எங்களுடைய பலங்களை பலவீனப்படுத்துவதற்காக,
தமித்தேசியக் கூட்டமைப்பை சின்னா பின்னமாக்கி உடைத்து தனித்து ஒவ்வொருவராக
நிற்க வைத்தால் எங்களுடைய மக்களுடைய எதிர் காலம் இலட்சியம், தனித்துவம்,
உரிமை, மொழி காக்கப்படுமா?. இது தான் அரசாங்கத்தினுடைய நோக்கம்...
சின்னா பின்னமாக உடைத்து எறிந்து விட்டால் நாடாளுமன்றிலே குரல் கொடுப்பதற்கு எவருமே இருக்க மாட்டார்கள். ஒற்றை ஒற்றையாக போய் அங்கே குரல் கொடுத்து நாங்கள் எதையும் சாதிக்க முடியாது.
22 பேர்கள் இன்று வரைக்கும் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். அது உங்களுக்கு வெளியில் தெரியாமல் இருக்கலாம்...
எங்களுடைய
போராட்ட வரலாற்றிலே எங்களுடைய தலைவர் எதற்காக உருவாக்கினார்களோ அந்த
கோட்பாட்டோடு இன்றுவரைக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பயணிக்கின்றது.
அதற்கு காரணம் சொல்கின்றேன். இன்று அமைச்சுப்பதவிகளைப் பொறுப்பெடுத்திருக்கலாம் அவர்கள்.
ஏன் பொறுப்பெடுக்கவில்லை? உங்களிடம் கேள்வியாக விடுகின்றேன்.
அவர்களுக்கு காசுக்கு ஆசையில்லையா? அமைச்சுப்பதவிக்கு ஆசையில்லையா? பொறுப்பெடுத்திருந்தால் அபிவிருத்திகளைச் செய்திருக்கலாம்.
அரசாங்கத்தோடு இணைந்திருக்கலாம். ஏன் இணையவில்லை? ஏன் பொறுப்பெடுக்கவில்லை.
நன்றாக சிந்தியுங்கள். எங்களுடைய இறுதிப்போராட்ட நேரத்தில் 2009-05-17 ஆம் திததி அறிவிக்கப்படுகின்றது.
அனைத்து போராளிகளும் அவர்களுடைய முடிவுகளை எடுங்கள் என அறிவிக்கப்படுகின்றது.
அந்த
நேரத்திலே கூட அண்ணன் அவர்களால் ஒரு கட்டளை இடப்பட்டு 100 போராளிகளை
அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன், துணைப்பொறுப்பாளர் சுதா அவர்களுடன்
முக்கியமான ஆளுமையான 100 போராளிகள் உயர் மட்ட குழுவாக வெள்ளைக்கொடியுடன்
அனுப்பப்படுகின்றார்கள்.
அதுவும் சாதாரணமாக அனுப்பப்படவில்லை.
சர்வதேசத்தினுடைய
தொடர்புகளோடு அனுப்பப்படுகின்றார்கள். ஏன் அனுப்பியிருப்பார்கள்? எதற்காக
அனுப்பியிருப்பார்கள்? சிந்தியுங்கள். ஆயுதப்போராட்டம்
மெள்னிக்கப்பட்டாலும், எங்களுடைய ஜனநாயக,அரசியல் போராட்டம்
மெளனிக்கப்பட்டுவிடக்கூடாது.
எங்களுக்கென
உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து ஜனநாயக நீரோட்டத்தில்
எங்களுடைய மக்க்களுக்காக குரல் கொடுக்கவேண்டுமென்ற அந்தக் குழு
அனுப்பப்பட்டது.
இதைத்தெளிவாக அரசாங்கம் அறிந்து எறிகணைத்தாக்குதலினூடு அவர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.
இது தான் உண்மை.தமிழ்த்தேசியக்கூட்டமைப் பு உருவாக்கப்படும்போது எந்தக் கொள்கையுடன் உருவாக்கப்பட்டார்களோ அந்தக் கொள்கையோடு இன்றும் நிற்கின்றார்கள்.
அது
அவர்களுடைய ஒரு அர்ப்பணம். அவர்களுடைய ஒரு ஒறுத்தல். ஏனெற்றால்
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் அமைச்சுப்பதவிகளைப் பெற்றால்
எங்களுடைய மக்களுக்கு அபிவிருத்திகளைச் செய்யலாம்.
ஆனால் எங்களுடைய உரிமைக்குரலை அடக்கி விடுவார்கள்.
காரணம் என்னவெனில் அவர்கள் சொல்வதையே செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.
ஆகவே
இதைத்தெளிவாக விளங்கிக் கொண்டுஎங்களுடைய தமிழ் வேட்பாளர்களை குறிப்பாக
எங்களுடைய மன்னார் மாவட்டத்திலே 3 வேட்பாளர்கள் உங்களுக்கு
அறிமுகமானவர்கள், உங்களுக்கு சேவை செய்பவர்கள், உங்களுடைய விருப்பு
வாக்குகளை சமநிலையில் அளித்து அவர்ள் மூன்றூ பேரையும், ஒருவன் சென்று
கதைப்பதை மூன்று பேர் கதைக்க வையுங்கள், நீங்களும் மூன்று பேரிடமும் இதே
போன் தேவையான வேலைகளை செய்து தாருங்கள் என உரிமையுடன் கேளுங்கள்.
இதே
போன்று எங்களுடைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலே எங்களுடைய போராளிகள்
இணைந்து சில வரையறைகளை, சில பேச்சு வார்த்தைகளை, நிபந்தனைகளை பல
சந்திப்புக்களை மேற்கொண்டு நாங்கள் 2004 ஆம் ஆண்டு எவ்வாறு செயற்பட்டோமோ
அதே போன்று 8 மாவடங்களிலும் போராளிகள் முன்னின்று உழைத்து செயற்பட்டும்
என்பதற்காகவே மன்னார் மாவட்டத்தில் பங்கேற்றுள்ளோம்.
அந்த வகையிலே வன்னிமாவட்டத்திலே 5 ஆசனங்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் எங்களுடைய மனங்கள் மாற்றப்பட்டால் இது நிச்சயம் நடக்கும்.
மேலும்
இதில் முன்னாள் போராளி பிரேம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.விநோகராதலிங்கம் ஆகியோர் கலந்து
கொண்டு உரை நிகழ்த்தினர்.
எங்களுடைய போராட்ட வரலாற்றிலே எங்களுடைய தலைவர் எதற்காக உருவாக்கினார்களோ அந்த கோட்பாட்டோடு இன்றுவரைக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பயணிக்கின்றது.
Reviewed by Author
on
July 17, 2020
Rating:

No comments:
Post a Comment