பிள்ளையானுக்கு அமைச்சு பதவி உறுதி ..!!
பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
கட்சியின் சார்பாக கிழக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்றால் அவருக்கு அமைச்சு பதவியை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவர் பிணை பெற்று சிறையில்இருந்து விடுவிக்கப்பட்டால் மட்டுமே அவர் அந்தப் பதவியைப் பெறுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பிள்ளையன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் பிள்ளயனை சிறையில் அடைத்து, அமைச்சுப் பதவியைப் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் சிலர் இருப்பதாக பிள்ளையானுக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்..
பிள்ளையானுக்கு அமைச்சு பதவி உறுதி ..!!
Reviewed by Author
on
July 31, 2020
Rating:

No comments:
Post a Comment