அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி ; பெண்ணுடன் பிடிபட்ட முகாமையாளர்

 அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர்.


இதன்போது, அங்கு முகாமையாளராகப் பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



 சட்ட நடவடிக்கை


அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உளவாளி ஒருவரைப் பயன்படுத்திப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   


   

தமிழர் பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி ; பெண்ணுடன் பிடிபட்ட முகாமையாளர் Reviewed by Vijithan on July 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.