இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இனக்கலவரங்கள் உருவாகக் கூடாது: மன்னாரில் சோசலிச இளைஞர் சங்கம் சார்பில் 'கருப்பு ஜூலை' நினைவூட்டலும் துண்டுப்பிரசுர விநியோகமும்!
முப்பது ஆண்டு கால கொடூர போருக்கு வழிவகுத்த 'கருப்பு ஜூலை' இனக்கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த கால வடுக்களில் இருந்து மீண்டு நாட்டில் இன நல்லிணக்கத்தை பலப்படுத்தும் நோக்கில் சோசலிச இளைஞர் சங்கத்தின் மன்னார் கிளையும் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையப் பகுதியில் விசேட துண்டுப்பிரசுர விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை இனக்கலவரமானது, நாட்டின் வரலாற்றில் அழியாத வடுக்களையும், எண்ணற்ற உயிரழிவுகளையும், சொத்து நாசங்களையும் ஏற்படுத்தியதுடன், நீண்ட கால உள்நாட்டுப் போருக்கும் அடிதளம் அமைத்தது.
இத்தகைய துயரமான சம்பவங்கள் மீண்டும் இப்பகுதியில் எக்காலத்திலும் தலைதூக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலேய இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, கடந்த காலத்தில் ஏற்பட்ட இனரீதியான முரண்பாடுகள் மற்றும் பிளவுகளைக் களைந்து, அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடனும் சமத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கும் பேருந்து நிலையப் பகுதிக்கு வருகை தந்தவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டன.
இனிவரும் காலங்களில் நாட்டில் எந்தவொரு மக்களுக்கிடையிலும் இனரீதியான மோதல்களோ அல்லது கலவரங்களோ ஒருபோதும் உருவாகக் கூடாது என்ற வலுவான செய்தியை இகழ்வின் ஊடாக சோசலிச இளைஞர் சங்கம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
July 23, 2026
Rating:






No comments:
Post a Comment