"லக்ஸ்மி கரங்களின்' முதியோர் திட்டத்தின் ஊடாக கத்தாலம்பிட்டி கிராமத்தை சேர்ந்த முதியோருக்கு உதவி....
தாயக
தொண்டு நிறுவனமாகிய “ லக்ஸ்மி கரங்களின்” முதியோர் நலன்காப்பு திட்டத்தில்
இன்று (2020-07-05 ) ஆறாவது முதியோராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்
பிரிவிற்கு உள்பட்ட கள்ளியடி கிராஉத்தியோகத்தர் பிரிவின் கத்தாலம்பிட்டி
கிராமத்தில் வசிக்கும் முதியோரை “ லக்ஸ்மி தாயவள்” அரவணைத்துக்கொண்டார் ..
ஒவ்வொரு மாதமும் இரண்டு முதியவர்களுக்கு “ லக்ஸ்மி கரங்கள்” புலம்பெயர்ந்து
வாழுகின்ற உறவுகளை பற்றிக்கொண்டு உதவி வருகின்றது..
அந்த வகையில் இன்றைய
முதியோர் நலன்நோம்பு திட்டத்தில் மன்னார் மாவட்ட முதியோர் மேம்பாட்டு
உத்தியோகத்தர் திரு.I.செந்தில்குமரன் அவர்களும் மாந்தை மேற்கு பிரதேச செயலக
முதியோர் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் கலந்து
சிறப்பித்ததுடன் மாவட்டச்செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தரினால் தான்
ஓவ்வொரு மாதமும் இரண்டு முதியவர்கள் சிபார்சு செய்யப்படுகின்றார்கள்..
இன்றைய ஆறாவது முதியோருக்கு 3000/- பெறுமதியான உணவுப்பொருட்களும் ரூபா
2000/- பணமும் வழங்கப்பட்டது மாவட்டத்தில் பல முதியவர்கள் சிறிய
குடிசைகளில் வாழ்ந்து வருகின்றார்கள்; என்பது குறிப்பிடத்தக்கது..
“ லக்ஸ்மி
கரங்களின்” மனித நேயப்பணிகளில் மிக உயர்ந்த பணியாக முதியோரை அரவணைக்கும்
பணி உள்ளதுடன் இத்திட்டத்திற்கு உதவிகள் வழங்கிய உறவுகள் அனைவருக்கும்
தாயகத்திலுள்ள “ லக்ஷ்மி கரங்களின் “ தொண்டர்கள் சார்பான நிறைவான நன்றிகளை
தெரிவித்துகொள்கிறது..
"லக்ஸ்மி கரங்களின்' முதியோர் திட்டத்தின் ஊடாக கத்தாலம்பிட்டி கிராமத்தை சேர்ந்த முதியோருக்கு உதவி....
Reviewed by Author
on
July 06, 2020
Rating:

No comments:
Post a Comment