முன்னாள் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதி இளைஞர்களை சந்தித்தார்..
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதி இளைஞர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிறிமுஸ் சிறாய்வா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அடம்பன் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தமிழர்கள் தற்போதைய சூழ் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை தொடர்பாகவும், தமிழ் தேசியத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தெளிவூட்டல்களையும் இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னாள் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதி இளைஞர்களை சந்தித்தார்..
Reviewed by Author
on
July 06, 2020
Rating:

No comments:
Post a Comment