காற்றுடன் கூடிய மழை காரணமாக வவுனியாவில் பலர் பாதிப்படைந்துள்ளனர்...
அந்தவகையில் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 5 சிறுதொழில் முயற்சியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும், வவுனியா பிரதேச செயலக பிரிவில 6 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு சிறு தொழில் முயற்சியாளரும் பாதிப்படைந்துள்ளார்.
வவுனியா வடக்கில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் மரம் முறிந்து விழுந்து குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். இப்பகுதியில் 6 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், ஒரு சிறு தொழில் முயற்சியாளரும் பாதிப்படைந்துள்ளார்.
இதன்படி, கடும் காற்று மற்றும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 20
குடும்பங்களைச் சேர்ந்த 69 பேர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் குழந்தை
ஒன்று மரணமடைந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். 16 வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளதுடன், சிறு தொழில் முயற்சியாளர்களும் பாதப்படைந்துள்ளதாக
மாவட்ட செயலகத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...
காற்றுடன் கூடிய மழை காரணமாக வவுனியாவில் பலர் பாதிப்படைந்துள்ளனர்...
Reviewed by Author
on
July 22, 2020
Rating:

No comments:
Post a Comment