பொட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் உயிரிழப்பு..!!
பொட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நூற்றுக்கணக்கான யானைகள் உயிரிழந்ததன் பின்னணியில் மர்மம் சூழ்ந்துள்ளது.
கடந்த மே மாதம் தொடக்கம் ஒகவாங்கோ டெல்டாவில் 350க்கும் அதிகமான யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஏன் உயரிழந்துள்ளன என்று யாருக்கும் தெரியாதுள்ளது. ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் வர இன்னும் காலம் உள்ளது என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல யானைகள் பலவீனமாகக் காணப்படுவதாக அருகாமைகளில் வாழும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.. சட்டவிரோத வேட்டையே ஆபிரிக்க யானைகளின் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனினும் பொட்ஸ்வானாவில் 1990களின் பிற்பகுதியில் 80,000 ஆக இருந்த யானைகள் எண்ணிக்கை தற்போது 130,000 ஆக அதிகரித்துள்ளது.

No comments:
Post a Comment