மன்னார் புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரச பேரூந்து ஊழியர்களுக்கு இடையில் முரண்பாடு.
மன்னார் புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரச பேரூந்து ஊழியர்களுக்கு இடையில் முரண்பாடு.
தனியார் போக்குவரத்துத் சேவையுடன் இணைந்து சேவையை மேற்கொள்ள அரச போக்குவரத்து சேவை மறுப்பு.
மன்னார் நிருபர்
17-08-2020
கடந்த வருடம் நகர திட்டமிடல் அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் நகர பகுதியில் புதிய பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டு கடந்த மாதம் வைபவரீதியாக புதிய பேரூந்து நிலையம் மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டு பொது போக்குவரத்துக்கு என திறந்து விடப்பட்டிருந்தது.
குறித்த பேரூந்து நிலையம் அரச பேரூந்து மற்றும் தனியார் பேரூந்துகள் இணைந்து போக்குவரத்து சேவையை வழங்கும் முகமாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனியார் போக்குவரத்து சேவையானது புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து கடந்த மாதம் தொடக்கதில் இருந்தே போக்குவரத்து பணிகளை ஆரம்பிக்கப்பட்டது.
ஆனாலும் அரச போக்குவரத்து சேவையானது இது வரை புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையினை ஆரம்பிக்காது
தற்காலிக பேரூந்து நிலையத்தில் சேவையை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அரச போக்குவரத்து சேவைக்கான பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையை ஆரம்பித்தனர்.
எனினும் அரச பேரூந்து ஊழியர்கள் தனியார் பேரூந்து சேவை மற்றும் இணைந்த போக்குவரத்து சேவைக்கு இடையூரை ஏற்படுத்தும் முகமாக அரச பேரூந்துகளை நிறுத்தியதுடன் தனியார் போக்குவரத்து ஊழியர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதை தொடர்து இன்று காலை மன்னார் புதிய பேரூந்து நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த நிலையில் இரு பேரூந்து சேவைகளையும் சமரசப்படுத்தும் முகமாக மன்னார் நகரசபையில் மன்னார் நகர சபை தலைவர் , செயலாளர், உறுப்பினர்கள் பொலிஸார் மற்றும் அரச தனியார் போக்குவரத்து ஊழியர்களை ஒன்றிணைத்து பேச்சு வார்த்தை ஒன்று இடம் பெற்றது.
அதன் போது முரண்பாடுகளை கலைந்து மக்களின் நன்மைக்காக இரு சாராரும் இணைந்து ஒரே தரிப்பிடத்தில் தரித்து இணைந்த மக்களுக்கான இலகுவான சேவையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டது.
இருப்பினும் தாங்கள் ஒருபோதும் தனியார் போக்குவரத்து சேவையுடன் இணைந்து செயற்படப்போவதில்லை எனவும், இணைந்து செயற்படும் பட்சத்தில் காலப்போக்கில் முரண்பாடுகள் தோற்றம் பெறலாம் எனவும், தங்களுக்கு தனியான இடத்தை ஒதுக்கி தரவேண்டும் எனவும் அப்படியில்லாவிட்டால் புதிய தரிப்பிடத்தில் தங்களுக்கு என தனி தரிப்பிடத்தை ஒதுக்கி தரவேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர்.
இல்லா விட்டால் வடக்கு ,கிழக்கு முழுவதும் உள்ள அரச போக்குவரத்து ஊழியர் சங்கத்தினருடன் இணைந்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்து கலந்துரையாடலில் இருந்து அரச போக்குவரத்து சேவை பிரதி நிதிகள் வெளியேறினர்.
அதே நேரத்தில் நாங்கள் இணைந்த சேவை அட்டவணைக்கு அமைவாக செயற்பட உள்ளதாக அரச சேவைக்கு பாதீப்பை ஏற்படுத்தாத வகையில் விட்டு கொடுப்புடன் மக்களுக்கான சேவையை வழங்கி அரச பேரூந்து சேவையுடன் இணைந்து பயணிக்க தயார் என மன்னார் தனியார் போக்குவரத்து சேவையினர் தெரிவித்துள்ளனர்
இருப்பினும் குறித்த கூட்டத்தில் எந்த ஒரு சமரசமும் எட்டப்படாத நிலையில் பல்வேறு கட்ட பேச்சுக்களுக்கு பின்னர் இணைந்த சேவையை வழங்காத முடியாத நிலையில் தனியார் பேரூந்து சேவைக்கு இடையூரை ஏற்படுத்த வேண்டாம் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
குறித்த பிரச்சினை காரணமாக மன்னார் புதிய பேரூந்து நிலையத்திற்கு போக்குவரத்துக்கு என வந்த மக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொண்டதுடன், தொடர்சியாக அரச மற்றும் தனியார் போக்கு வரத்து ஊழியர்களுக்கு இடையில் சுமூகமற்ற நிலை காணப்பட்டது
மன்னார் புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரச பேரூந்து ஊழியர்களுக்கு இடையில் முரண்பாடு.
Reviewed by Admin
on
August 17, 2020
Rating:

No comments:
Post a Comment