வயதானவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அச்சம்....
உலக சுகாதார ஸ்தாபனத்தின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் தகேஷி கசாய் ஆசிய – பசிபிக் நாடுகளில் 50 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவும் ஆபத்து காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில் உரையாற்றிய அவர், தொற்று பாதித்துள்ள 50 வயதிற்கும் குறைவானவர்களில் பெரும்பாலானோருக்கு தமக்கு தொற்று இருப்பது கூட தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் தொற்றின் போக்கு மாறி வருவதாகக் கூறியுள்ள அவர், 20, 30, 40 வயது இளைஞர்கள் மூலம் அதிகளவில் கொரோனா தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பான், பிலிபைன்ஸ், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 3இல் 2 சதவீதமானவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment