1.77 கோடி பேர் COVID-19 காரணமாக வேலையிழப்பு.....
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1 கோடியே 89 இலட்சம் இந்தியர்கள் வேலையிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை மாதத்தில் மட்டும் 50 இலட்சம் பேர் வேலையிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனை தொடரந்து மே மாதத்தில் 1 இலட்சம் பேர் மட்டுமே வேலையிழந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் 1.77 கோடி பேர் வேலையிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
அத்துடன் ஜூன் மாதத்தில் 39 இலட்சம் பேருக்கு புதிதாக வேலை கிடைத்த நிலையில் அதற்கு அடுத்த மாதத்திலேயே அதிகளவிலான வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment