நில உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் வன்னி மாவட்ட மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும்...
மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவபாதம் கஜேந்திரன்
தெரிவித்தார்.
வவுனியா, திருநாவற்குளத்தில் அமைந்துள்ளஅவர்களது அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “எமது கட்சியானது 2010ஆம் ஆண்டிலிருந்து கொள்கை விலகாமல், விலைபோகாத தலைமையுடன் பயணித்து வருகின்றது. தமிழ் தேசிய அரசியலைப் பாதுகாப்பதற்கும் நில உரிமைகளைப்
பாதுகாப்பதற்கும் வன்னி மாவட்ட மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் அந்தக் கொள்கைகளில் இருந்து விலகி அரசாங்கத்தினை ஆதரித்திருந்தார்களே தவிர மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. அவர்கள்
தீர்வுவரும் என்று மக்களை ஏமாற்றி அரசியல் நாடகத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
எனவே, கடந்த காலங்களில் ஏமாற்று அரசியலை செய்தவர்களை விலக்கிவிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் ஆதரிக்கவேண்டும். மாற்றம் என்பது அரசியல் பதவிகளுக்கான மாற்றமாக இருக்கக்கூடாது. கடந்த காலங்களில் பல கட்சிகளில் போட்டியிட்டவர்கள் இன்று
கட்சிமாறி வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றனர். தாங்கள்தான் மாற்றுத் தலைமை என்று கூறுகின்றார்கள்.அவர்கள் அனைவரும் ஓய்வுதியம்பெற்றபின்னர்தான் போட்டியிடுகின்றனர். ஆனால் எமது கட்சியானது ஊழலற்ற நேர்மையான சமூக ஆர்வலர்களையும் இளைஞர்களையும் களத்திலே இறக்கியுள்ளது.
இன்று காணாமல் போனவர்களின் உறவினர்கள்எமக்கு ஆதரவினை வழங்கியுள்ளனர். அதுபோல பல புத்திஜீவிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். வவுனியா மாவட்டமானது பல தொல்பொருள் சான்றுகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. அந்தவகையில் தொல்பொருள் உள்ளஇடம் என்ற போர்வையில் மக்களின் பல காணிகள் அபகரிக்கபட்டிருக்கின்றது. தமது பூர்விகக் காணிகளில் தமிழ் மக்கள் குடியேறமுடியாத நிலை காணப்பட்டுகின்றது.
இன்று மலசலகூடம் இல்லாத வீடுகள் வடக்கிலே இருக்கின்றது. பல வீடுகள் கட்டிமுடிக்கப்படாத நிலையிலே இருக்கின்றது. எனவே போரிலே கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புனரமைக்கப்பட வேண்டும்.
எனவே தமிழ் தேசிய மக்கள் அனைவரும்ஒன்றிணைந்து, தமிழ் தேசிய மக்கள் முண்ணணியை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” என கஜேந்திரன்
தெரிவித்தார்.
நில உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் வன்னி மாவட்ட மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும்...
Reviewed by Author
on
August 03, 2020
Rating:

No comments:
Post a Comment