ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்
ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடங்களாக உள்ள ஹோட்டல்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை சமூகத்திற்குள் விடுவிக்கக்கோரி நடக்கும் போராட்டங்களை நிராகரித்துள்ள ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் அலன் டஜ், மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்ட அகதிகள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தபட மாட்டார்கள் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
இவர்களுக்க மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் ஆனால் அதன் பிறகு அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அலன் டஜ், “ஒன்று அவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும்(அமெரிக்கா- ஆஸ்திரேலியா அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ்) அல்லது பப்பு நியூ கினியா, நவுருத்தீவுக்கு திரும்ப வேண்டும் அல்லது ஒருவேளை அவர்கள் அகதி கிடையாது என அறியப்பட்டால் அவர்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப வேண்டும் அவர்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.
“இவர்கள் ஆஸ்திரேலியாவிலேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்பதையே இந்த செயல்பாட்டாளர்கள்
விரும்புகிறார்கள் என்பது எனக்கு தெரியும். அது மீண்டும் நடக்க நாங்கள் விடமாட்டோம்,” எனக் கூறியுள்ளார் குடியேற்ற அமைச்சர் அலன் டஜ்.
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற நூற்றுக்கணக்கான அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள் பப்பு நியூ கினியா, நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உடல் நலம்/மனநலம் பாதிக்கப்பட்ட அகதிகள் மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, தடுப்பிற்கான மாற்று இடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment